யாழ். வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா போதைப்பொருள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள் ளதுடன் அவற்றை கடத்தி வந்ததாக சந்தேகிக்கும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமாராட்சி கடல் வழியாக வெள்ளிக்கிழமை காலை கஞ்சா கொண்டு வரப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் அதிகாலை 4.30 மணியளவில் குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.