மகிந்தவுக்கு வேட்புமனு இல்லை; தேசியப் பட்டியலும் வழங்கப்போவதில்லை : மைத்திரி திட்டவட்டம்!

0
103

maithripala-srisena-6600பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்‌சவுக்கு தான் ஒருபோதும் வேட்புமனு வழங்கப் போவதில்லை என்றும் தேசியப் பட்டியல் எம்.பி. நியமனத்தை வழங்கவும் தான் தயாரில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன நேற்று திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன பொதுத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்களுடன் நேற்று முழு நாளும் பேச்சு நடத்தியுள்ளார்.

இடதுசாரிக் கட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே மைத்திரிபால மேற்கண்டவாறு தெரிவித்தார் என்று சந்திப்பில் கலந்துகொண்ட இடதுசாரி தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, சு.கவின் சிரேஸ்ட உபதலைவர் நிமல் சிறிபாலடி சில்வா ஆகியோருடனும் ஜனாதிபதி நேற்று மாலை பேச்சு நடத்தியுள்ளார்.

தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, ஆசனப் பங்கீடு உட்பட சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளன.

அத்துடன், சுசில் பிரேமஜயந்த மகிந்த அணியில் இணையவுள்ள விவகாரம் பற்றியும் அங்கு பேசப்பட்டுள்ளது. இதற்கிடையில் மகிந்த ராஜபக்‌சவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட ஆறு பேர் அடங்கிய ஒருங்கிணைப்புக்குழு தனது அறிக்கையை இன்று மைத்திரியிடம் ஒப்படைக்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here