நியாயமான கோரிக்கைகளையே அகிம்சை வழியில் முன்னெடுக்கின்றனர்!

0
107

ஐந்து நாட்களாக வீதியில் நிற்கும் அப்பாவி மக்கள் யாரும் பொது சொத்துக்களை சேதமாக்கவில்லை . இராணுவத்திற்கு கல்லு வீசவில்லை . சிங்கள மக்களுக்கு எதிராக கோஷமிடவில்லை . இனவாதம் பேசவில்லை . மாறாக மிக எளிமையான நியாயமான கோரிக்கைகளையே அகிம்சை வழியில் மட்டுமே முன்வைக்கின்றார்கள்.

  1. இலங்கை இராணுவம் மற்றும் ஒட்டுக்குழுக்களால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட அப்பாவி இளைஞர்கள் நடந்தது என்ன என கேட்கின்றார்கள்
  2. வடக்கு கிழக்கு அப்பாவி மக்களுக்கு சொந்தமான தனியார் நிலங்களை தொல்லியல் திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி சபை , வன வள திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களம், என நீண்டு செல்லும் வகையற்ற மத்திய அரச நிறுவனங்கள் அபகரிப்பதை தடுத்து நிறுத்த கோருகின்றார்கள்
  3. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சைவ வழிபாட்டு இடங்களில் தொல்லியல் திணைக்களம் மூலம் பௌத்த மத சின்னங்களை , விகாரைகளை நிறுவி ஆக்கிரமிக்க வேண்டாம் என கேட்கின்றார்கள்
  4. வடக்கு கிழக்கு தமிழர் நிலங்களில் பௌத்த மயமாக்கல் , சிங்கள குடியேற்றங்கள் நிலவும் அடாவடியான அத்துமீறல்களை தடுத்து நிறுத்த கோருகின்றார்கள்
  5. மட்டக்களப்பு , முல்லைத்தீவு, கிளிநொச்சி என தொடர்ச்சியாக அபகரிக்கப்டும் மக்களின் வாழ்வாதாரமான மேச்சல் தரைகளை தங்களிடமே மீள ஒப்படைத்து விடும் படி கேட்கின்றார்கள்
  6. மனித குல நாகரீகத்திற்கு எதிராக படுகொலைகள் புரிந்தவர்கள் மன்னித்து விடுவிக்கப்படும் இலங்கையில் பல ஆண்டுகளாக எந்த குற்றமும் செய்யாமல் அரசியல் கைதிகள் என்கிற பெயரில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் அப்பாவி அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என கேட்கின்றார்கள்
  7. அப்பாவி தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கும் இனப்படுகொலை/ போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச ரீதியாக நீதி கேட்கின்றார்கள்
  8. கோவிட் 19 தொற்று நோய் பரவலால் இறந்து போகும் அப்பாவி இஸ்லாமிய உடலங்களுக்கு தங்களது மத நம்பிக்கைளுக்கு இசைவாக இறுதி சடங்குகளை செய்வதற்கான அனுமதியை கேட்கின்றார்கள்
  9. மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச நாள் ஊதியமாக 1000 ரூபாவை ஏற்பாடு செய்யுமாறு கேட்கின்றார்கள்
  10. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளான ” மரபுவழி தாயகம் , சுயநிர்ணய உரிமை , தமிழ்த்தேசியம்” என்பன அங்கீகரிக்கப்படவேண்டும் என கேட்கின்றார்கள்

பகிர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here