பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டிவரைக்குமான பேரணி இன்று நல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபிப் பகுதியில் அலையெனத் திரண்டு அஞ்சலி செலுத்திய காட்சி சிங்கள தேசத்தை அச்சமடைய வைத்துள்ளது.
கடந்த ஆண்டு தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாலயப் பகுதியில் நினைவேந்தலை சிறிலங்கா பேரினவாதத்தின் படைகள் தடுத்து வேடிக்கை பார்த்தமை குறிப்பிடத்தக்கது.
எங்கள் மண் எமக்கே உரியது என்பதையும் மாவீரர்களின் தியாகம் வீண்போகவில்லை என்பதையும் இப்போராட்டம் உணர்த்தி நிற்கிறது.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபத்தின் கனவு விரைவில் நனவாகும் என்பதே உறுதி.
(படங்கள்: சபேஷ்)