பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் மூன்றாம் நாள் பேரணி திருகோணமலை நகரில் இன்று (5) காலை ஆரம்பித்த நிலையில் பல்வேறு திட்மிட்ட சதி மற்றும் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் சற்றுமுன் முல்லைத்தீவு நகரை வந்தடைந்துள்ளது.

பேரணி தற்போது முல்லைத்தீவு நகரத்தில் பயணித்து, மாவட்டச் செயலகம் வரை சென்றது. அங்கிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வரை வாகனக் பேரணி பயணிக்க ஆரம்பித்துள்ளது.
முல்லைத்தீவிற்குள் பேரலையாக பேரணி நுழைந்துள்ளதுடன் முல்லைத்தீவு மக்கள் எதிர்பாராத அளவில் திரண்டு பேரணியில் இணைந்தனர்.
அத்துடன் முல்லைத்தீவிலிருந்து இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் பேரணியும் போராட்டத்துடன் இணைந்துள்ளது.
நீராவியடியில் தரிசனம்,
முன்னதாக முல்லைத்தீவு எல்லையில் பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைக் காண்பிக்க முற்பட்டபோதும் அதனை மீறி குறித்த பேரணி முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தரிசித்ததைத் தொடர்ந்து பேரணி முல்லைத்தீவு நகரை நோக்கிச் சென்றிருந்தது.