பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று 03.02.2021 புதன்கிழமை காலை ஆரம்பமாகியுள்ள நிலையில், கொட்டும் மழையிலும் உறவுகள் தமது நடைபவனியை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
ஆங்காங்கே காவல்துறையினர் குறித்த போராட்டத்திற்கு தடை ஏற்படுத்தியபோது, பேரணியில் செல்பவர்களோடு முறுகல் நிலை ஏற்பட்டுப் பேரணி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது .
முஸ்லீம் பிரதேசங்களில் பேரணி செல்லும் போது முஸ்லீம் மக்களும் இணைந்து தங்கள் ஆதரவினை வழங்கிப் பேரணியில் நடந்து சென்றமையையும் காணமுடிந்தது.