மியான்மர் இராணுவத்தினர் தமது நாட்டின் அதிகாரத் தலைவர் ஆங் சான் சூகியை (75-வயது) கைது செய்து, இராணுவ சதி மூலம் அந்நாட்டின்ஆட்சி அதிகாரத்தை இன்று (1) அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதிகாரமும் மாற்றப்பட்டுள்ளது என்றும் இராணுவ தொலைக்காடச்சி தெரிவித்துள்ளது.
இதன்படி ஆங் சான் சூகியுடன் மேலும் பல அரசியல்வாதிகளும் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ ஆட்சிக்கு எதிரான் ஆங் சான் சூகியின் கட்சி நவம்பரில் நடந்த தேர்தலில் நாடாளுமன்றத்தின் கீழ் மற்றும் மேல் சபைகளில் 476 இடங்களில் 396 கைப்பற்றியிருந்தது.