திருகோணமலை – திருக்கடலூர் பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தைச் சேர்ந்த விசேட தேவையுடைய 17 வயது சிறுவன் ஒருவன் கேணி ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளான்.
சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள கேணியில் நேற்று மாலை (28) விழுந்து கிடந்த பட்டத்தை எடுக்கச்சென்ற போது சிறுவன் கேணியில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருகோணமலை தலைமையப் பொலிஸார் மற்றும் கடற்படை சுழியோடிகள் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதன்படி சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.