முல்லைத்தீவு மாந்தை கிழக்கு அம்பாள்புரம் மாணவர்களுக்கான போக்குவரத்துக்கு இதுவரை எந்தவித தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் கால்நடையாகவே சென்று கல்வி கற்கும் அவல நிலை காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பல கிராமங்கள் போக்குவரத்து வசதிகள் இன்றிக் காணப்படுவதனால் இவ்வாறான கிராமங்களில் உள்ள மாணவர்கள், பொதுமக்கள் அன்றாடம் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறு பின்தங்கிய கிராமங்களில் ஒன்றாக காணப்படும் அம்பாள்புரம் 6ம் கட்டை, கொல்ல விளான்குளம் ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் குறித்த கிராமங்களில் இருந்து தினமும் சுமார் 25 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கால்நடையாக வன்னிவிளாங்குளம் மற்றும் பாலிநகர் ஆகிய பாடசாலைகளுக்கு செல்கின்ற நிலை காணப்படுகின்றது.
இந்த கிராமங்களிலிருந்து நீண்டதூரம் கால்நடையாக சென்று கல்வி கற்று வரும் மாணவர்களின் போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என கிராம அமைப்புக்கள், பெற்றோர்கள் தொடர்சசியாக கோரிக்கை விடுத்து வருகின்றபோதும் இதுவரை எந்தவித தீர்வுகளும் கிடைக்கவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
(நன்றி:இணையம்)