இலங்கை கடற்படையினரின் படகுடன் மோதுண்டு பலியாகிய நான்கு இந்தியாவின் தமிழக மீனவர்களுக்கு இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் யாழ் பல்கலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் டோரா படகு மோதி மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளாகியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வின் இறுதியில் கண்டன அறிக்கை ஒன்றும் மாணவர்களால் வாசிக்கப்பட்டு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது
தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்று கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது உயிரிழந்த மீனவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.