யாழ். போதனாவில் சிகிச்சை பெற்றவருக்கு தொற்று: மருத்துவர்கள், தாதியர்கள் தனிமையில்!

0
166

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அந்த விடுதியில் கடமையாற்றிய மருத்துவர்கள், தாதியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த ஒருவருக்கே தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவருக்கு கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்று இருக்கவில்லை என்றும், இங்கு வந்தபின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here