
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் சம்பந்தமாக பிரித்தானியா அவதானம் செலுத்தி வருவதாக பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.
தமது ட்விட்டர் பதிவில் அவர் இது குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொவிட்-19 நோயினால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல் பலவந்தமாக தகனம் செய்யப்படுகின்றமை உள்ளிட்ட மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா அவதானம் செலுத்துகிறது.
இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை மனித உரிமைகள் மாநாட்டில் மார்ச் மாதம் முன்வைக்கப்பட உள்ளது.
இது தொடர்பான தமது அணுகுமுறை குறித்து பிரித்தானியா மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்