போதைக்கு அடி மையாகியுள்ள பலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது அதிகரித்து ள்ளதாகவும் நான்கு மணித்தியாலத்திற்கு ஒருவர் சிகிச்சைக்கென யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் டாக்டர் சிவன் சுதன் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை யாழ். வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவித்த வைத்தியர் சுதன்.
வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அரைவாசி கட்டிலுக்கு மேல் தற்கொலை முயற்சியில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெறுபவர்களே உள்ளனர். இதனால் இயற்கை நோயினால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிக்கபெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றோம். அது மட்டுமன்றி வைத்தியசாலை விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறுபவர்களில் பலர் போதை பொருள் பாவனையால் ஏற்பட்ட நோய்களுக்கே சிகிச்சை பெறுகின்றனர்.
மது மற்றும் போதை பொருள் பாவனையால் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் வீதி விபத்துக்கள் போன்றவற்றால் ஏற்பட்ட காயங்கள் என்பவற்றுக்கே அதிகமானவர்கள் சிகிச்சை பெறுகின்றார்கள்.
இதனால் வைத்தியசாலையில் உள்ள தாதியர்கள், வைத்தியர்களின் வேலைப்பழு அதிகரிப்பதனால் பிற நோய்களுக்கு சிகிச்சை பெற வந்தவர்களை கவனிப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.
அது மட்டுமன்றி போதைபொருள் மற்றும் மது பாவனையால் ஏற்படும் நோய்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை பெறுபவர்களால் மருந்து வகைகள், வளங்கள் என்பனவும் வீண் விரய மாகின்றன. இலங்கையில் ஏனைய பிரதேசங்களைவிட வடக்கிலேயே போதைப்பொருள் மது பாவனை அதிகமாக உள்ளது. அதற்கான காரணம் கண்டறியப்பட்டு அவற்றைத் தடுக்க அனைவரும் ஒனறிணைந்து போராட வேண்டும் எனக் கூறினார்.