மன்னாரில் 123 கொரோனாத் தொற்று;இருவர் பலி!

0
151

மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 123 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.

இரண்டாவது கொரோனா தொ்றறாளர் மரணம் நேற்று பதிவாகியுள்ளதுடன், மன்னார் மாவட்டத்தில் தொற்று நிலை அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மேலும்,

“மன்னார் மாவட்டத்தில் நேற்று மேலும் 23 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர், கடந்த வாரம் மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் விடுதி இலக்கம் இரண்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். குறிம்ம விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டமையினால் இவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், பி.சி.ஆர். பரிசோதனையின்போது தொற்று இல்லையென முடிவு வந்ததுடன் அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இவருக்கு நேற்று முன்தினம் இரவு சடுதியாக நோய் நிலை அதிகரித்தது, மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டுவரும் வழியில் உயிரிழந்தார்.

உயிரிழந்த பின்னர் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மன்னார் மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் இரண்டாக உயர்ந்துள்ளன.

இதேவேளை, கடந்த ஜனவரி ஒன்று முதல் தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 123 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக இதுவரை 140 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here