யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் மாணவர் ஒன்றியம் இன்று (19) செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்படி கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்போது,
பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட நிலையில் மாணவர்களினதும் தாயகத்தின் புலம்பெயர் தேசங்களில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் ஆதரவுகளினாலும் இடம்பெற்ற போராட்டம் மூலம் தூபியை மீண்டும் அமைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆகையினால் இத்திட்டத்திற்கு நிதி தேவைப்படுவதால் இதற்கான நிதி உதவியை வழங்குமாறு அனைவரிடமும் மாணவர் ஒன்றியம் வேண்டி நிற்கின்றது.
இந்த நிதியுதவியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வைப்பிலிடுமாறும் வங்கி கணக்கு இலக்கத்தையும் மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைப்பதற்கு மாணவர் ஒன்றியத்திடம் மாத்திரமே இந்த நிதி உதவியை வழங்குமாறும், வேறு இடங்களில் இதற்கான நிதி சேகரிக்கப்படவில்லை என்பதையும் ஏதேனும் சேகரிப்புகள் இடம்பெற்றால் அதற்கு மாணவர் ஒன்றியம் பொறுப்பில்லை என்பதனையும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.