பிரான்சு நெவர் நகரில் இடம்பெற்ற தமிழர் திருநாள் நிகழ்வு!

0
482

“உழவே தலை  உழவனை நினை” என்பதற்கு இணங்க தமிழரின் பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்றான தைத்திருநாளை நெவர் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து நெவர் தமிழ்ச்சோலையும் கடந்த 16-01-2021 அன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் பள்ளி மண்டபத்தில் நிகழ்த்தியது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வாழிட பங்குத் தந்தை அருட்திரு யோன் வௌபியர் அவர்களும் சிறப்பு விருந்தினராக பங்கின் தந்தை அருட்திரு ஜேம்ஸ் அவர்களும் விருந்தினராக வாழிட பெண்மணி டுலனநை அவர்களும் மற்றும் சங்க உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என எல்லோரும் கலந்து கொண்டனர். மங்கள விளக்கேற்றும் வைபவத்தைத் தொடர்ந்து பொங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.அதனை அடுத்து வரவேற்பு உரையினை பள்ளி ஆசிரியர் கரிசினி அவர்கள் நிகழ்த்தினார்.பின்பு பிரதம விருந்தினர் பொங்கல் பண்டிகையைப் பற்றி வாழிட மொழியில் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அதனை அடுத்து வளர்நிலை-1 மாணவிகள் செல்வி யுஷானா மற்றும் செல்வி கிறிஸ்ரிகா ஆகியோரால் பொங்கல் பற்றிய கவிதை நிகழ்த்தப்பட்டது.பின்னர் சிறப்பு விருந்தினர் எமது தாய்மொழியில் பொங்கல் கொண்டாடுவதன் காரணம் பற்றி எடுத்தியம்பினார். அதன்பின் சென்ற ஆண்டு    (2019) கல்வி மேம்பாட்டு பேரவையால் நிகழ்த்தப்பட்ட பொதுத்தேர்வில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் சென்ற ஆண்டு திருக்குறள் போட்டியில் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.பின்பு வளர்நிலை- 8 மாணவி நிலுக்சினி அவர்களால் பேச்சு நிகழ்த்தப்பட்டது. அடுத்து பொங்கலை அருட்திரு ஜேம்ஸ் அவர்களின் சிறு பிரார்த்தனையுடன் அனைவரும் பரிமாறிக் கொண்டனர்.அதனை அடுத்து நன்றி உரையினை சங்க பொருளாளர் ஜெயந்தி அவர்கள் நிகழ்த்தினார்.பின்னர் 12:45 மணியளவில் இந் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here