பிரான்சில் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

0
876


இந்திய சிறீலங்கா கூட்டுச்சதியால் வங்கக்கடலில் 16.01.1993 அன்று வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணிமனையில் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது.
பிரான்சில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு அமைய மட்டுப்படுத்தப் பட்டவர்களுடன் குறித்த நிிகழ்வு பகல் 15.00 மணிக்கு இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை திரான்சி தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. கணேஸ்தம்பையா அவர்கள் ஏற்றிவைத்தார், கேணல் கிட்டு உட்பட மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினையும், மலர் வணக்கத்தினையும் மாவீரர் லெப். கலையொளியின் சகோதரரும், மாவீரர் 2 ஆம் லெப். மரியாவின் சகோதரரும் செலுத்தினர்.
அகவணக்கத்தினைத் தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள் கேணல் கிட்டு பற்றியும் இன்றைய அரசியல் நிலை குறித்தும் கருத்துரைத்தார்.
அவர் தனது உரையில் விடுதலைப் போராட்ட வரலாற்றில் கேணல்கிட்டுவின் பங்களிப்பு குறித்தும், புலம் பெயர் தேசத்தில் அவர் பல கட்டமைப்புக்களை விரிவு படுத்தியதுடன், அவரின் செயற்பாடுகளே இன்றைய புலம் பெயர் செயற்பாடுகளுக்குக் காரணமாக அமைந்தது என்றும் தெரிவித்தார்.
தமிழரின் தாரக மந்திரமான ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம’; என்ற கோசத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here