தனிமைப்பட்டோர் தேவையற்று அச்சப்படத் தேவையில்லை – த.சத்தியமூர்த்தி

0
192

தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் தேவையற்ற அச்சத்தை தவிர்க்கவேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தப்படுபவர்கள் தேவையற்ற பயம், பதட்டத்தை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் பணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா நிலைமை தொடர்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 1,284 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி. தற்போதைய நிலையில் டெங்கு நோய் தொற்று நிலைமை யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களோடு ஒப்பிடும்போது குறைந்த அளவிலே காணப்படுகின்றது.

எனினும் தற்போது மழை பெய்ததன் காரணமாக நீர் தேங்கியிருக்கும் இடங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக செயற்படுமிடத்து டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து யாழ் மாவட்டத்தினை பாதுகாக்கலாம் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here