வடக்கில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தக் கோரி பல பாகங்களில் கவனயீர்ப்புப் பேரணிகள் அமைதியான முறையில் நடைபெற்றன. வட மாகாணத்தில் காணப்படும் பிரதான பாட சாலைகளின் முன்றலில் காலை 8.30 மணிக்கு பிரதேச பாடசாலை மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளைத் தாங்கியவாறு பேரணியாகச் சென்றனர். விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான தெருக்கூத்துக்களும் இடம்பெற்றன.
வடக்கிலிருந்து போதைப்பொருட்களை அகற்றுவோம், அரக்ககுணம் கொண்ட மதுவை அடியோடு அழிப்போம், மரணங்கள் மலிந்த பூமியாக இடமளியோம், போதை பணத்தை மட்டுமல்ல வாழ்க்கையையும் விரயமாக்குகின்றது, புகைக்காதே என் னைச் சிதைக்காதே போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதா கைகளைத் தாங்கியவாறு பாடசாலை மாண வர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.
இப்பேரணிகளில் வடமாகாண அமைச்சர் கள், எதிர்க்கட்சித் தலைவர், உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட கல்விசார் சமூகத்தினர் கலந்து கொண்டனர்.
பிரதான வைபவம்
வட மாகாண கல்வி அமைச்சும் யாழ்.கல்வித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடுசெய்த பிரதான கவனயீர்ப்புப் பேரணி யாழ்.நகரின் மத்தியில் ஆரம்பமாகி முற்றவெளியியில் நிறைவடைந்தது. இதில் யாழ்.வலயப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றதுடன் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, விவசாய, கால்நடை அமைச்சர் ஐங்கரநேசன், எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராஜா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நல்லூர்
கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் காலை 8.30 மணிக்கு ஒன்றுகூடிய நல்லூர் கோட்ட பாட சாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் கே.கே.எஸ்.வீதி, ஆடியபாதம் வீதி, பொற்பதி வீதி யூடாக பேரணியாகச் சென்றனர்.
இதில் மதுவை ஒழிப்போம் மக்களைக் காப்போம், போதைப் பாக்கிலிருந்து மாண வரைப் பாதுகாப்போம் போன்ற சுலோக அட்டைகளை தாங்கியவாறு மாணவர்கள் சென்றதுடன் கோண்டாவில் இந்துக் கல்லூரி மாணவர்களின் போதை ஒழிப்பு தெருக்கூத்தும் இடம்பெற்றது.
உடுவில், தெல்லிப்பழை
உடுவில், தெல்லிப்பழை கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் உடுவில் மகளிர் கல்லூரியில் ஒன்றுகூடி மருதனார்மடம் – உரும்பிராய் வீதி வழியாக இராமநாதன் கல்லூரியைச் சென்றடைந்தார்கள். இதில் புௌாட் தலைவர் த.சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், கல்விப் பணிப் பாளர்கள், அதிபர், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்கள் மீதான வன் முறைகளுக்கும் மதுவுக்கும் எதிராக பதாகை களை தாங்கியிருந்தனர்.
வடமராட்சி
எப்படியும் வாழலாம் என்றில்லாது இப் படித்தான் வாழவேண்டும் என உலகறியச் செய்வோம் எனும் தொனிப் பொருளில் வடமராட்சி பிரதேசத்தின் பல பாகங்களிலும் போதைப்பொருளுக்கு எதிரான கவன ஈர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது. அமை தியாக இடம்பெற்ற இப்பேரணியில் வடமாகாண சபை உறுப்பினர்களான சிவயோகன், சுகிர்தன் ஆகியோரும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் இ.த. ஜெயசீலன், கரவெட்டிப் பிரதேச செயலாளர் சிவஸ்ரீ உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பருத்தித்துறை, நெல்லியடி, கரவெட்டி ஆகிய இடங்களில் பேரணிகள் நடை பெற்றன. பருத்தித்துறை நடைபெற்ற அமைதி விழிப்புணர்வுப் பேரணியில் 13 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர்.
அதேபோன்று நெல்லியடி, கரவெட்டி பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட பேரணி களில் அக்கோட்ட வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் பங்கேற்றனர்.
பாக்குமெல்லும் வாய்கள் எல்லாம் பாவப்பட்ட வாய்களாம், புகைக்கும் வாய்கள் எல்லாம் புற்றுநோய்க்கு விண் ணப்பித்துக் காத்திருக்கும் வாய்களாம், ஆயுளைக் குறைத்து அமைதியைக் குலைக் கும் போதைப்பொருட்களை புறமொதுக்கு வோம் உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் தாங்கிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில்
கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்பணர்வு பேரணிகள், விழிப் புணர்வு கருத்தரங்குகள் நடைபெற்றன.
கண்டாவளைப் பிரதேச கல்விக்கோட் டத்தின் முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான கவனயீர்ப்புப் பேரணி ஒன்று பாடசாலையின் முன்பாக ஏ–35 வீதியில் முன்னெடுக்கப்பட்டது. இதே போன்று தர்மபுரம் மத்திய கல்லூரியிலும் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
Close