கணவனால் தீமூட்டப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி மரணம் !

0
109

theeபடுக்கையில் இருக்கும் போது கண வனால் தீ மூட்டப்பட்டு பலத்த எரிகா யங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட இளம் குடும்பப்பெண் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மரணமடைந் துள்ளார்.

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை – காக்கைதீவைச் சேர்ந்த ஸ்ரீதரன் சாந்தினி (வயது 33) என்பவரே இவ்வாறு மரண மடைந்தவராவார்.

கடந்த 20ஆம் திகதி அதிகாலை குறித்த பெண் படுக்கையில் இருந்தபோது வீட்டில் எரிந்துகொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கை எடுத்த கணவன் அவர் மீது வீசி தீ மூட்டியுள்ளார்.

கூக்குரலிட்டு எழுந்த பெண் தானே நெருப்பை அணைக்க முயன்றார். அவரு டைய தாயாரும் உதவிசெய்த போதிலும் கணவர் எந்தவொரு உதவியையும் செய்யாத நிலையில் இருந்தார். பின்னர் ஒருவாறு அப்பெண் தீயை அணைத்துவிட்டு எரி காயங்களுடன் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றவர் குறித்த சம்பவம் சம்பந்தமாக வாக்குமூலம் அளித்தார். அதன்பின்னர் அப்பெண் பொலிஸார் அறிவு ரைக்கேற்ப வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே சிகிச்சை பலனின்றி குறித்த பெண் மரண மடைந்துள்ளார்.

மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார்.

அப் பெண்ணின் கணவரான ஸ்ரீதரன் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய் யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Close

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here