தலைவர் மீது அன்பு கொண்டு எம்மோடிருந்தவர்… இன்று இல்லை என்பதை எப்படி நம்புவது!

0
237

ஒரு புறத்தே வரலாறுகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொரு புறத்தே நமது வரலாறுகள் மறைந்து கொண்டிருக்கின்றன.

போர்க்கால தாயகத் திரைத்துறைச் செயற்பாடுகளின் நீண்ட அனுபவங்கொண்ட செயற்பாட்டாளர். நிதர்சனம் திரைப்பட உருவாக்கற்பிரிவோடு பயணித்தவர்.
இயக்குனராகவும் நடிகராகவும் தன்னை எம் மனங்களில் நிலைபெறச் செய்தவர்.

சொல்வதற்கு பல உண்டென்றாலும், அதிர்ச்சி தரும் இவரது மறைவு வார்த்தைகளை உறைய வைக்கின்றது.

ஈழ சினிமா பயணத்தில் இன்னும் ஏதேனும் செய்திட வேண்டி அயராது பேசிக்கொண்டும், செயற்பட்டுக் கொண்டும் இருந்தவர்.
என்ன சம்பவம் என்றாலும் தொலை பேசியில் அழைத்தும், தகவல் பெட்டியில் பகிர்ந்தும் ஆலோசிப்பவர், தவறுகளை சுட்டிக் காட்டுபவர், தன்னில் தவறெனினும் ஏற்றுக் கொண்டவர். விமர்சனங்கள் பலவற்றை கடந்தபடி தாயக தேசத்தின் பற்று கொண்டு, தலைவர் மீது அன்பு கொண்டு எம்மோடிருந்தவர்… இன்று இல்லை என்பதை எப்படி நம்புவது.

சென்று வாருங்கள் கேசவராஜன் அண்ணா.

உங்கள் படைப்புகளினூடாகவும் சந்தித்த / பேசிக்கொண்ட நினைவுகளினூடாகவும் இவ்வுலகில் எப்போதும் வாழ்வீர்கள்.

அமைதியில் இளைப்பாறுங்கள்.

றொபேட் – பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here