பாராளுமன்றம் கலைப்பு: ஓகஸ்ட் 17ல் தேர்தல்!

0
217

parliament_2பாராளுமன்றம் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன இது தொடர்பான வர்த்தமானியில் நேற்று இரவு கையொப்பமிட்டதையடுத்து வர்த்தமானி அரசாங்க அச்சகத்தால் வெளியிடப்பட்டது.

15 ஆவது பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 17ம் திகதி நடத்தப்படலாமென தேர்தல் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியலமைப்பின்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 56 – 62 தினங்களுக்கிடையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதேநேரம் பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணையாளர் அறிவிக்க வேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையொப்பமிட்டதும் பாராளுமன்றத்தின் ஆட்சிக்காலம் முடிவடைகிறது.

கடந்த ஜனவரி 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அதனையடுத்து பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று 100 நாட்களுக்காக புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.

நூறு நாட்கள் நிறைவடைந்து கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படவிருந்த போதும் 19வது அரசியலமைப்புத் திருத்தம் உட்பட அரசியலமைப்புத் திருத்தங்கள் பல நிறைவேற்றப்படவிருந்ததால் பாராளுமன்ற அமர்வு நேற்று வரை தொடர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here