யாழ். பல்கலையில் உள்ள நினைவுத்தூபிகள் இடித்தழிக்கப்படுகின்றன. அங்கே எண்ணிக்கையில் மிக குறைவானவர்களே எதிர்த்து குரல்கொடுத்து கொண்டிருக்கின்றார்கள்.
அச்சுறுத்தும் வகையில் முகங்களை முழுமையாக மூடிய சிறிலங்கா இராணுவ அணி உந்துருளிகளில் சுற்றுக்காவல் போல் சென்று அச்சுறுத்துகின்றது.
ஊடக நண்பர்கள் தாக்கப்படுகிறார்கள் ,அச்சுறுத்த படுகின்றார்கள்.
சிறிலங்கா காவல்துறையினரும் குவிக்கப்படுகின்றார்கள் அங்கே எதிர்த்து நிற்பவர்களின் எண்ணிக்கை போதாது அவர்கள் ஆதரவுக்கு மக்களை வருமாறும் கோரும் நேரலை காணொளிகளை காண கிடைக்கிறது .
வழமை போலவே ஒரு சிலரை பலி கடா ஆக்கிவிட்டு வேடிக்கை பார்க்காதீர்கள் ஒரு பொங்கு தமிழ் போல, ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் போல ,டெல்லி விவசாயிகள் போல எல்லோரும் ஒன்றாகுங்கள் எல்லோரும் பல்கலை வாசல் சென்று எதிர்ப்பை காட்டுங்கள் என்று அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.