ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) எதிர்வரும் பங்குனி மாத அமர்வில் இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசத்தை வழங்கி இலங்கை அரசைப் பாதுகாக்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்குச் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை” (ICC) நோக்கி நகர்த்த உலகத் தமிழர்கள் தயாராக வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமே ஈழத் தமிழரின் அவலங்களுக்குக் குறைந்தபட்சத் தீர்வையாவது பெற்றுத் தருமென்பது எமது உறுதியான நிலைப்பாடு!!!
இதற்காகத் தமிழ்ச் சிவில் மற்றும் சமூக அமைப்புக்கள், புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், நில மீட்புக்காகப் போராடும் மக்கள், மதத் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டிற்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் சட்டத்தரணி சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.