கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக திருகோணமலை நகரம் முடக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மத்திய வீதியில் கொரோனா தொற்றாளர்கள் நேற்று (1) அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து நகர வீதியானது முடக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகர் பகுதியில் எழுமாற்றாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், நேற்றையதினம் ஒருவருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடை தொகுதிகளில் பணி புரியும் வேலை ஆட்களுக்கு அன்ரிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பரிசோதனையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மத்திய வீதி ஆனது மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து சம்பத் வங்கி சந்தி வரை மூடப்பட்டுள்ளது.