முதல்வருக்கு வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேறக்கோருவதற்கு உரிமை உண்டு:சபையில் சம்பந்தன் !

0
439

Sampanthan-800x450சி.வி.விக்­கி­னேஸ்­வரன் வட­மா­கா­ணத்தின் முத­ல­மைச்சர் என்ற வகையில் தனது நிர்­வா­கத்தின் கீழுள்ள வட­மா­கா­ணத்­தி­லி­ருந்து இரா­ணுவம் வெளி­யேற வேண்டும் என்று கூறு­வ­தற்கும் அதனை வலி­யு­றுத்­து­வ­தற்கும் அனைத்து உரி­மையும் உள்­ளது. முதல்வர் சி.வி.விக்கி­னேஸ்­வ­ர­னையும் இந்­நாட்டின் ஒட்­டு­மொத்த தமிழ் மக்­க­ளையும் புலி­க­ளாக சர்­வ­தே­சத்­திற்கு சித்தி­ரித்து
காட்­டு­வ­தற்கே சுதந்­தி­ரக்­கட்­சியில் தொங்கி கொண்­டி­ருப்போர் முயற்­சிக்­கின்­றனர் என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் நேற்று சபையில் தெரி­வித்தார்.
சர்­வ­தே­சத்­திற்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாது எம்­முடன் 18 வது சுற்­றுப்­பேச்­சுக்­களை முறித்­துக்­கொண்டு வெளி­யே­றி­ய­வர்­க­ளா­லேயே எமது நாட்­டி­னதும் தமிழ் மக்­க­ளி­னதும் பிரச்­சினை உக்­கி­ர­ம­டைந்து கொண்­டி­ருக்­கி­றது. உள்­ளக விசா­ரணை கோரிய சர்­வ­தேசம் சர்­வ­தேச விசா­ர­ணையைக் கோரு­வ­தற்கும் இதுவே காரணம் என்றும் கூறினர்.
ஐக்­கிய நாடு­களின் சர்­வ­தேச மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பான செயற்­பா­டு­களை பெருந்­தோட்­டத்­துறை அமைச்சர் நிறை­வேற்றிக் கொண்­டி­ருக்க இந்­நாட்டின் அப்­போ­தைய வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்த ஜி. எல். பீரிஸ் பின் வரி­சையில் அமர்ந்­தி­ருந்­த­தை­யிட்டு இன்றும் நான் வெட்­கப்­ப­டு­கின்றேன். இப்­ப­டி­யான தகு­தி­யற்­ற­வ­ரான பீரிஸ் அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­க­ளத்தின் அறிக்கை தொடர்பில் பேசு­வ­தற்கோ எமது நாட்­டி­னதும் மக்­க­ளி­னதும் இறைமை பற்றி பிரஸ்­தா­பிப்­ப­தற்கோ எந்த அரு­க­தையும் அற்­றவர் என்­ப­தையும் கூறிக் கொள்­கின்றேன் என்றும் சம்­பந்தன் தெரி­வித்தார்.
அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­க­ளத்தால் வெளி­யி­டப்­பட்­ட­தான சர்­வ­தேச பாது­காப்பு தொடர்பில் 2014ஆம் ஆண்­டுக்­கான அறிக்கை குறித்து பேரா­சி­ரியர் ஜி. எல். பீரி­ஸினால் கொண்டு வரப்­பட்ட ஒத்­தி­வைப்பு வேளைப் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். சம்­பந்தன் எம்.பி. இங்கு மேலும் கூறு­கையில்
நாடு இன்று ஒரு­வி­த­மான குழப்­பத்­திற்குள் இருந்து வரு­கின்­றது என்­பதை முதலில் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். இறு­திக்­கட்ட யுத்தம் நிறை­வ­டைந்­ததன் பின்னர் இலங்­கைக்கு வருகை தந்த ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூனிடம் அன்­றைய அர­சாங்கம் பல உறுதி மொழி­களை வழங்­கி­யி­ருந்­தது. அத்­துடன் சர்­வ­தேச நாடு­க­ளி­டமும் அதே வகை­யான உறு­திப்­பா­டு­களை வழங்­கி­யி­ருந்­தது. எனினும் அவ்­வாறு வழங்­கப்­பட்ட உறுதி மொழிகள் அன்­றைய அர­சாங்­கத்­தினால் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­க­வில்லை. இதன் மூலம் கடப்­பாடு மற்றும் பொறுப்பு என்­பன மீறப்­பட்­டுள்­ளன. தவற விடப்­பட்­டுள்­ளதை இறு­திக்­கட்ட யுத்தம் எனும் ?????? அதன் பின்­னரும் கூட சர்­வ­தேச சட்­டங்கள் மீறப்­பட்ட நிலை­மையை காண முடியும். சர்­வ­தேச ரீதியில் இன்னும் புலிகள் இயங்கி வரு­வ­தாக கூறு­கின்­றனர். இது ஒரு புதிய விட­ய­மல்ல. இதனை நாமும் அறிந்தே வைத்­தி­ருக்­கின்றோம்.
இருந்த போதிலும் பிரிக்­கப்­ப­டாத ஐக்­கிய இலங்­கைக்குள் தமிழ் மக்­க­ளுக்கு தீர்வு ஒன்று வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தியே கடந்த அனைத்து தேர்­தல்­க­ளிலும் எமது மக்கள் வாக்­க­ளித்து வந்­துள்­ளனர். நாம் முன்­னைய அர­சாங்­கத்­துடன் 18 சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்­டி­ருந்தோம். இருப்­பினும் எந்­த­வித முடிவும் இன்­றிய நிலையில் அவர்­களே அந்த பேச்­சுக்­களை முறித்துக் கொண்­டனர். சர்­வ­தே­சத்­துக்கு எடுத்­துக்­காட்­டாக நடந்து கொள்­ளா­மைக்­காக அன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் வெட்­கப்­பட வேண்டும்.
உள்­ளக விசா­ரணை ஒன்­றையே 2012, 2013 மற்றும் 2014 ஆகிய தேதி­களில் சர்­வ­தேச மனித உரிமைப் பேர­வையில் சர்­வ­தேச நாடு­களின் கோரிக்­கை­யாக இருந்­தது. எனினும் முன்­னைய அர­சாங்கம் அதனை செயற்­ப­டுத்­தாத கார­ணத்­தால்தான் சர்­வ­தேச விசா­ரணை ஒன்­றுக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது.
அக்­கா­லப்­ப­கு­தி­களில் மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பான விட­யங்­களை அன்­றைய பெருந்­தோட்ட அமைச்சர் நிறை­வேற்றிக் கொண்­டி­ருந்த வேளை அப்­போது வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்த பேரா­சி­ரியர் ஜி. எல். பீரிஸ் பின்­வ­ரி­சையில் அமர்ந்­தி­ருந்­த­தை­யிட்டு வெட்­கப்­ப­டு­கின்றேன்.
நாம் புலி­களை ஆத­ரிக்­க­வில்லை. ஆனால் இங்­குள்­ள­வர்கள் கூறு­வது போன்று புலம்­பெயர் தமி­ழர்கள் அனை­வ­ருமே புலி­களும் அல்ல. புலம்­பெயர் தமி­ழர்கள் எனும் முத­லீட்­டா­ளர்கள் கல்­வி­மான்கள் என புலம்­பெ­யர்ந்­தோரும் இருக்­கின்­றனர். அவர்கள் எமது நாட்டில் முத­லீடு செய்­வ­தற்கு தயா­ராக இருக்­கின்­றனர். வடக்கில் மட்­டு­மல்­லாது முழு நாட்­டிலும் முத­லீ­டு­களை செய்து இந்­நாட்­டினை அபி­வி­ருத்தி செய்ய விரும்­பு­கின்­றனர்.
ஐக்­கிய இலங்­கைக்குள் அவர்கள் செயற்­ப­டவே விரும்­பு­கின்­றனர். ஆனால் அவர்­களைப் புலிகள் என்று சித்­த­ரித்து அவர்கள் இலங்­கைக்கு திரும்­பு­வ­தையும் முத­லீ­டு­களை மேற்­கொள்ள முற்­ப­டு­வ­தையும் தடுக்­கி­றீர்கள். சமூகப் பொறுப்­புள்­ள­வர்­களை இந்­நாட்­டிக்குள் அனு­ம­திக்க மறுக்­கின்­றீர்கள்.
முன்­னைய அர­சாங்­கத்தில் எந்­த­வொரு தமி­ழ­ருக்கும் இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை வழங்­கி­யது கிடை­யாது.
2005 இலும் சரி 2010 இலும் சரி இரு தட­வை­க­ளி­லுமே புலி­கள்தான் ஆட்­சியை கைப்­பற்­றி­னார்­களா?.
சி.வி. விக்­கி­னேஸ்­வரன் வட­மா­கா­ணத்தின் முத­ல­மைச்சர் அவர்­க­ளது நிர்­வா­கப்­பி­ர­தே­சத்­தி­லி­ருந்து இரா­ணுவம் வெளி­யேற வேண்டும் என்று கூறு­வ­தற்கு அனைத்து உரி­மையும் கொண்­டி­ருக்­கிறார். அவர் அவ்­வாறு கூறு­வதால் சி.வி.யை விடு­த­லைப்­பு­லி­யாக சித்­தி­ரிக்க முயற்­சிக்­கின்­றனர்.
சுதந்திரக்கட்சியை நான் வெறுக்கவில்லை. ஆனால் அதில் தொடங்கிக் கொண்டிருப்பவர்களே இவ்வாறு சித்தரிக்கின்றனர். இந்நாட்டில் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் புலிகள் என்றும் அச்சுறுத்தல்காரர்கள் என்றும் சர்வதேசத்துக்கு சித்தரித்துக் காட்டுவதற்காக முயற்சிகன்றனர். ஆகவே இப்படி தொங்கிக்கொண்டிருப்பவர்கள் தொடர்பில் நான் அலட்டிகொள்ளவில்லை. ஆனால் நாட்டில் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என்று கூறிக்கொள்கிறேன்.
இந்நாட்டில் வாழும் சகலருக்கும் சமத்துவம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதுவிடின் இறைமைபற்றி பேசுவதற்கு எவருக்கும் அருகதை இல்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here