பிரான்ஸில் தென்னாபிரிக்க வைரஸ் முதல் நபருக்கு தொற்றுக் கண்டறிவு!

0
187

தென்னாபிரிக்காவில் பரவிவரும் மரபு மாற்றமடைந்த வைரஸ் தொற்றிய நபர் ஒருவர் பிரான்ஸில் பரிசோதனை யின்போது கண்டறியப்பட்டுள்ளார்.

இத்தகவலை சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

நாட்டின் கிழக்கு மாவட்டமான Haut-Rhin பகுதியில் சுவிஸ் எல்லையோரமாக வசிக்கும் ஆண் ஒருவருக்கே தென்னாபிரிக்க வைரஸ் தொற்றியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தென்னாபிரிக்காவில் இருந்து சில தினங்களுக்கு முன்னரே பிரான்ஸ் திரும்பியிருக்கிறார்.அதன்பின் வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவர் சுவிஸில் வைரஸ் பரிசோதனை செய்துள்ளார். அங்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவருக்கு தொற்றியது மாற்றமடைந்த புதிய வைரஸ் என்பது பின்னர் அடையாளப்படுத்தப்பட்டது. அவர் உடனடியாகவே தன்னைத் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் தொடர்புடைய வேறு எவரும் அடையாளம் காணப்படவில்லை – என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

லண்டனில் பரவிவரும் மற்றொரு மாற்றமடைந்த புதிய வைரஸ் தொற்றிய நபர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் பிரான்ஸின் Tours நகரில் கண்டறியப்பட்டமை தெரிந்ததே. இந்த இரண்டு வைரஸ் வகைகளும் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டவை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குமாரதாஸன். பாரிஸ்.
31-12-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here