குர்திஷ் முன்னேற்றம்: ஐ.எஸ். கோட்டையில் பதுங்கு குழிகள் தோண்டி பாதுகாப்பு அதிகரிப்பு!

0
181

qaeda-terrorist4-600இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவின் கோட்டையான ரக்கா நகரை பாதுகாக்க பதுங்கு குழிகள் தோண்டி, மே லதிக படைகளை குவித்து முழு தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரி விக்கின்றன.

ரக்கா நகருக்கு அருகில் இருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நகர் மற்றும் வடக்காக 50 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் இராணுவத் தளம் ஒன்றை குர் திஷ் போராளிகள் கைப்பற்றிய நிலையிலேயே ஐ.எஸ். இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ரக்கா நகரை சூழ பதுங்கு குழிகள் தோண்டப்படு வதை குர்திஷ் போராளிகள் உறுதி செய்துள்ளனர். ரக்கா நகரின் பிரதான விநியோகப்பாதைகள் துண்டிக் கப்பட்ட நிலையில் நகரில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

நான்கு மாத யுத்தத்திற்கு பின்னர் ஐ.எஸ். கொபானி நகரில் இருந்து கடந்த ஜனவரியில் பின்வாங்கியது தொடக்கம் அந்தக் குழு துருக்கி எல்லைப் பகுதிகளில் குர்திஷ் போராளிகளிடம் மோசமான தோல்வியை சந்தித்து வருகிறது.

சிரிய கிளர்ச்சியாளர்களின் ஆதரவுடனும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையின் வான் தாக்குதல் உதவியுடனும் ஐ.எஸ் ஸ{க்கு எதிராக போரா டும் குர்திஷ்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ரக் காவை நோக்கி மேலும் நெருங்கும் வகையில் அருகில் இருக்கும் அயின் இஸ்ஸா நகரை கைப் பற்றினர்.

அயின் இஸ்ஸா நகர் ரக்கா நோக்கிய பிர தான பாதையில் அமை ந்துள்ளது. சிரியா மற் றும் ஈராக்கில் கணிச மான நிலங்களை கைப் பற்றி சுயமாக கிளாபத் அரசை அறிவித்த ஐ.எஸ். அந்த கிளாபத்தின் தலை நகராக ரக்காவை கட ந்த ஆண்டு பிரகடனம் செய்தது.

ஐ.எஸ். சிரியாவின் மேற்கில் அலப்போ மாகாணத்தின் பகுதிகளையும் கிழக் கில் ஹஸகே மாகாணத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

எனினும் ரக்காவை விரைவில் தாக்கும் திட்டம் இல்லை என்று குர்திஷ் படை குறிப்பிட்டுள்ளது. அயின் இஸ்ஸா நகரை கடந்து செல்லும் கிழக்கு-மேற்கு வீதியை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டிருப் பதாக அது தெரிவித்துள்ளது.

எனினும் ஐ.எஸ். ரக்கா நகரில் பதுங்கு குழிகளை தேண்டியும் பாதுகாப்பை பலப்படுத்தியும் தாக்குதல் ஒன் றுக்கு தயாராகி வரும் செய்தி தமக்கு கிடைத்திருப்ப தாக குர்திஷ் மக்கள் பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் ரெதூர் ‘pலில் ராய்ட்டருக்கு நேற்று முன்தினம் குறிப் பிட்டார். சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தை கண்காணி த்து வரும்; பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைக் குழுவும் இந்த தகவலை உறுதி செய் துள்ளது.

வடக்கு ரக்காவில் இருக்கும் 17ஆம் பிரிவு இராணுவத் தளத்தை நோக்கி வாகனத் தொடரணிகள் செல்வதா கவும் ஐ.எஸ். நிலைகள் பலப்படுத்தப்பட்டு வருவதாக வும் அந்த மனித உரிமைக் குழு குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் வான் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு மற்றும் உளவுத்தகவல்கள் பரிமாற்றம், வானிலிருந்து அதிக ஆயுதங்கள் போடப்பட்டதன் விளைவாகவே குர்தி ஷ்களால் ஐ.எஸ்ஸை வீழ்த்த முடிந்திருப்பதாக அமெ ரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் ஐ.எஸ். பதில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் எச்சரித் துள்ளனர்.

கடந்த மே மாதம் ஈராக்கின் திக்ரிட் நகரில் இருந்து அரச படையிடம் பின்வாங்கிய ஐ.எஸ். பின்னர் மேற்கு மாகாணமான ஆன்பாரின் தலைநகரான ரமடியை கைப் பற்றியது. இதனால் அங்கு வாழ்ந்த 275,000 குடியிருப் பாளர்கள் வெளியேறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here