முன்னணியின் கொள்கைக்குத் துரோகம் செய்த உறுப்பினர்கள் நீக்கப்படுவர்!

0
285

எமது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணனை ஆதரித்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைக்குத் துரோகம் செய்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 10 உறுப்பினர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (30) புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

அத்துடன் மணிவண்ணனை ஆதரித்ததன் மூலம் கட்சியின் கொள்கைக்குத் துரோகம் இழைத்து, யாழ்ப்பாணம் மாநகர சபையில் எமது கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பத்துப்பேர் டக்ளஸ் தேவானந்தாவுடன், கைகோர்த்துள்ளனர். அவர்களை எமது அமைப்பில் இருந்து நீக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

(உதயன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here