வவுனியாவில் ஆலய பூசையில் கலந்து கொண்டோர் தடுப்பு!

0
143

வவுனியா – கணேசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் 100க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மண்டல பூஜை சுகாதார பிரிவினரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

கணேசபுரம ஐயப்பன் ஆலயத்தில் நேற்று (28) இரவு மண்டல பூஜை இடம்பெற்றது. இந்த மண்டல பூஜையில் எட்டியாந்தோட்டை பகுதியியைச் சேர்ந்த 23 பேர் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் நெளுக்குளம் காவல்துறையினர் மற்றும் சுகாதார பிரிவினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து இவ்விடயத்திற்கு விரைந்த இரு தரப்பினரும் பூஜையை இடைநிறுத்தியிருந்ததுடன், அங்கு கலந்து கொண்டவர்களின் பெயர் விபரங்களை பதிவு செய்தனர்.

சுகாதார விதிமுறைகளை மீறி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வெளிமாவட்டத்தை சேர்ந்தோர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டமையால் அவர்களை தனிமைப்படுத்துவது குறித்தும் பரிசீலித்து வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here