வவுனியா – பறண்நட்டகல் பகுதி கிணறு ஒன்றிலிருந்து தாயினதும் அவரது மூன்று வயது மகளினதும் சடலங்களை ஓமந்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்று (27) அவர்களது வீட்டில் இருந்துள்ளனர். எனினும் இரவு 12 மணியவிளவில் காணாமல் போயிருந்த நிலையில் ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை தேடியுள்ளனர்.
இந்நிலையில் இன்று (28) மதியம் வீட்டுக்கு அருகில் இருந்த வயல் கிணறு ஒன்றிலிருந்து அவர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த ரமேஸ் ஜெயலலிதா (42-வயது) என்ற தாயும் திதுர்சனா (3-வயது ) என்ற அவரது மகளுமே உயிரிழந்துள்ளனர்