பிரான்ஸ் மனிதநேய செயற்பாட்டாளர் திரு பரமலிங்கம் அவர்கள் மீதான தாக்குதலை கடுமையாக கண்டிகின்றோம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

0
96

icet_logoகடந்த 18.06.2015 வியாழக்கிழமை நள்ளிரவு அன்று பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு. பரமலிங்கம் அவர்கள் மீது இனம் தெரியாதவர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுமதிக்கும் வகையில் தாக்குதல் செய்துள்ளனர் . புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசிய விடுதலையை நோக்கிய செயற்பாட்டில் நிற்கும் மனிதநேயபணியாளர் மீதான இத் தாக்குதலை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம் கடுமையாக கண்டிகின்றோம்.

தாயகத்தில் எமது உறவுகளின் உரிமைக்குரல்கள் அடக்கப்பட்டு இருக்கும் நிலையில் புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் அந்தந்த நாடுகளில் அமையும் சட்டங்களுக்கு அமைய தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றோம் . அந்தவகையில் ஏனைய பல மனிதநேய செயற்பாட்டாளர்கள் போல் திரு பரமலிங்கம் அவர்களும் தேசத்துக்காக பணியாற்றி வந்த நிலையில் தான் இனம் தெரியாத நபர்களால் அவர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.

மனிதநேயமற்ற இச் செயலை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம் கண்டிப்பதோடு இத் தாக்குதலை நடாத்தியவர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கோரி நிற்கின்றோம் .திரு பரமலிங்கம் அவர்கள் மீதான தாக்குதல் தேசியத்துக்கு விரோதமாகவே பார்க்கப்பட வேண்டும்.

எமது தேசிய விடுதலைப் போராட்டப் பயணம் இன்று மிகப்பெரும் சவால் மிகுந்த காலகட்டத்தில் நிற்கின்ற நிலையில் தாயகத்திலும் , புலம்பெயர் தேசங்களிலும் அனைவரும் ஒன்றுபட்ட சக்தியாக திரண்டு ஓர் அணியில் மாவீரர்களின் மற்றும் மக்களின் கனவை நனவாக்குவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here