யாழ். அரியாலை மண்ணின் புகழ் பூத்த நாடகக் கலைஞன் சைவப்புலவர் கலாபூசணம் சதாசிவம் உருத்திரேஸ்வரன் அவர்கள் தனது 73 ஆவது வயதில் நேற்று புதன்கிழமை கொழும்பில் சாவடைந்துள்ளார்.
சமாதான நீதிவான் மற்றும் கமநல திணைக்களத்தின் ஓய்வு பெற்ற உதவி ஆணையாளருமான இவரது சாதாரண பேச்சில் அரசபாவமும்; நடையில் அரசநடையும் இருக்கும். எத்தனையோ மேடைகளில் தன் நடிப்பாளுமையை வெளிப்படுத்தியவர்.
இலங்கேஸ்வரன் ,எல்லாளன்,
தெய்வப்பாவை,அபஸ்சுவர கீதம்,நல்லைநகர் நாவலர்,இராஜராஜசோழன் போன்ற நாடங்களில் அமரரின் நடிப்பு உச்சம் தொட்டிருக்கும். குறிப்பாக அரச வேடங்களில் தனது அசாத்திய திறமையை வெளிக்காட்டியிருப்பார். அன்னாரின் இழப்பு நாடகக் கலைக்கு இட்டு நிரப்ப முடியாத ஒன்றாகும்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறுகின்றன எனக் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.