யாழில் தேவையற்ற அலங்காரங்களை வாகனங்களிலிருந்து உடன் அகற்றுக ; மோட்டார் வாகன திணைக்களம்!

0
121

autoயாழ்.மாவட்டத்தில் வீதிவிபத்துக்களை தடுக்கும் நோக்குடன் மாவட்ட அரச அதிபரின் கட்டளைக்கு அமைய வீதியில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் எதிர்வரும் வாரம் முதல் சோதனைக்கு உள்ளாக்கப்படும் என பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் வீதி விபத்துக்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அரச அதிபரின் கோரிக்கைக்கு அமைய மோட்டர் வாகனத் திணைக்களத்தினால் வீதியில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. இந்த சோதனை நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இதன்போது வீதிப் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள், சிற்றூர்திகள் என்பனவும் சோதனை செய்யப்படவுள்ளன. வீதிப் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத வானகங்கள் இனங்காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொலிஸாருடன் இணைந்து கடந்த வாரம் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்திலும் தொடரவுள்ளது.
இதன்போது அதிக புகையுடன் செல்லும் வாகனங்கள், தேவையற்றவிதத்தில் கண்ணாடிகள் பூட்டியிருத்தல், தேவையற்ற ஸ்ரிக்கர்கள் ஒட்டியிருத்தல், தேவைக்கு அதிகமாக இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் அழகுசாதனங்கள் என்பனவற்றுடன் போக்குவரத்து சேவையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் ஈடுபடுகின்றன.
எனவே இவ்வாறு சேவையில் ஈடுபடும் வாகனங்களின் உரிமையாளர்களோ அல்லது சாரதிகளோ அவற்றை அகற்றுவதுடன் மாற்று நடவடிக்கையினையும் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் ஒருவாரத்திற்குப் பின்னர் சோதனை செய்யும் போது கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார்கள்.
எனவே சாரதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மேலும் வீதி ஒழுங்குகள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளையும் நாம் ஏற்பாடு செய்துள்ளோம். அதற்கமைய யாழ். மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் ஒவ்வொன்றிலும் கருத்தரங்கினை மேற்கொள்ளவுள்ளோம் . அத்துடன் வாகன சாரதிகளுக்கும் எமது விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. இவ்வாறான இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் எதிர்வரும் காலங்களில் விபத்துக்களை தடுத்து பெறுமதி மிக்க உயிர்களைக் காத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here