யாழ்.மாநகரில் கழிவுநீர் வாய்க்காலில் பெருமளவு பிளாஸ்ரிக் கழிவுகள்!

0
204

யாழ்ப்பாணம் மாநகரில் கழிவுநீர் வாய்க்கால்களில் காணப்படும் கழிவுப் பொருட்கள் சுகாதார தொழிலாளர்களினால் அகற்றப்பட்டுவருகின்றன.

யாழ்ப்பாணம் மாநகரின் போதனா வைத்தியசாலை வீதியில் இந்த நடவடிக்கை இன்று (20) நண்பகல் முன்னெடுக்கப்பட்டது.

கழிவுநீர் வாய்க்காலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக் கிடப்பதனால் நீர் வழிந்தோடு செயற்பாடு பாதிக்கப்பட்டது. அதனால் வெள்ள நீர் வழிந்தோடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையிலேயே யாழ்ப்பாணம் மாநகர சபையினால் கழிவுநீர் வாய்க்கால்கள் துப்புரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here