முல்லைத்தீவு வவுனிக்குள குளக்கட்டில் கப் வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் காணாமல் போன தந்தையும் மகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வானகத்தைச் செலுத்திய 37 வயதுடைய தந்தை, 3 வயதுடைய மகள் ஆகியோரின் சடலங்கள், இன்று (20) காலை மீட்கப்பட்டுள்ளன.
விபத்தில் 13 வயதுடைய சிறுவன் நேற்று மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
வாகனத்தில் சாரதியான 37 அகவையுடைய கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன்,அவரது மூன்று வயது மகளாக ரசீந்திரன் சார்ஜனா ஆகியோரை நேற்று (19) இரவிரவாக தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு இன்று(20) காலை மீட்புப்பணியினரின் உதவியுடன் குறித்த இருவரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.