தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கின்ற கோணம் மாறுபட்டது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களுக்கு நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கினால் போதும் என்று நிலையும், யுத்தம் நிறைவடைந்துவிட்டால் பிரச்சினை முடிந்தது என்று மனநிலையுமே இருக்கிறது.
ஆனால் தமிழ் மக்கள் இந்த தேர்தலை பல்வேறு பிரச்சினைகளுடன் எதிர்நோக்குகின்றனர்.
மீள்குடியேற்றம், இராணுவத்தை அகற்றுதல், அரசியல் கைதிகளின் விடுவிப்பு, காணி சுவீகரிப்பு நிறுத்தப்படுதல், அத்துடன் சர்வதேச விசாரணைகளுக்கு சிறிலங்கா ஒத்துழைத்தல் போன்ற பல்வேறு தேவைகள் தமிழ் மக்களுக்கு இருக்கின்றன.
இந்த பிரச்சினைகளுக்கு சரியான தீர்வினை வழங்குகின்ற வேட்பாளர் யார் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிந்துக் கொள்ள வேண்டும்.
இதன் பொருட்டு எதிர்வரும் திங்கட் கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பினை நடத்தி, தீர்மானம் ஒன்றுக்கு வரவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.