பிரான்சில் சாவைத் தழுவிக்கொண்ட முன்னாள் ஊடக இல்லத் தலைவரும் நாட்டுப்பற்றாளருமான பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 9வது ஆண்டு நினைவு நிகழ்வு கடந்த 16.12.2020 அன்று புதன்கிழமை லிமையில் பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது கல்லறையில் நடைபெற்றது.
பிரான்சு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசியக் கொடியை மாவீரர் பணிமனையைச் சேர்ந்தவர்கள் போர்த்தனர். தொடர்ந்து நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் துணைவியார் ஈகைச் சுடரினை ஏற்றிவைக்க, அவரின் பிள்ளைகள் மலர்மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வந்திருந்தவர்களால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் வணக்கம் செலுத்தப்பட்டது