கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்ட பின்னரும் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளைத் தொடர திட்டமிட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று தெரிவித்தார்.
“நாம் அனைத்து வருகையாளர்களையும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கும் மேலும் 14 நாள் சுய தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்துவோம்” என அவர் கூறினார்.
நேற்று நடைபெற்ற கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய பணிக்குழு கூட்டத்தில், வெளிநாடுகளிலிருந்து மேலும் 65,000 இலங்கையர் நாடு திரும்பவுள்ளதாகவும் சாத்தியமான அனைத்து வழிகளைக் கொண்டு அவர்களுக்கு வசதிகள் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.