லண்டனில் இன்று முதல் மூன்றடுக்கு கட்டுப்பாடுகள்!

0
196

லண்டன், தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு மற்றும் வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. லண்டனில் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளதால் அங்கு மூன்றடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த பெப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் லட்சக்கணக்கான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சில மாதங்களுக்கு பிறகு பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே தலைநகர் லண்டன், தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு மற்றும் வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் அப்பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. லண்டனில் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளதால் அங்கு மூன்றடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மட் ஹன்ஹாக் கருத்து வெளியிடுகையில்,

லண்டன் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் மூன்றடுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்படும். பொது இடங்களில் 6 பேருக்கு மேல் ஒன்றாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் தெற்கு பிரித்தானியாவில் வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்க கூடும்.

சில இடங்களில் ஒவ்வொரு வாரமும் பாதிப்பு 2 மடங்காகி வருகிறது.

மக்களை பாதுகாக்கவும், அதிக அளவு பாதிப்புகளையும், நீண்ட கால பிரச்சினைகளையும் குறைக்க முடியும் என்பதால் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மிகவும் அவசியமானது.” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here