திருகோணமலை – சீனக்குடா விமானப் படைத் தளத்தில் இருந்து விமானியுடன் புறப்பட்ட விமானப்படையின் பி.ரி-6 பயிற்சி விமானம் ஒன்று இன்று (15) செவ்வாய்க்கிழமை மதியம் தரைத் தொடர்பை இழந்த நிலையில் கந்தளாய் வயல் வெளியில் வீழ்ந்து நொருங்கியுள்ளது.
கந்தளாய், சூரியபுரம் பகுதியில் குறித்த விமானம் வீழ்ந்துள்ளது. இதன்போது விமானி பலியாகியுள்ளார்.
தொடர்பை இழந்து காணாமல் போன பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியது.
திருகோணமலையில் உள்ள China Bay தளத்திலிருந்து புறப்பட்டு காணாமல் போன பயிற்சி
விமானமே விபத்துக்குள்ளாகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை PT-6 பயிற்சி விமானம் காணாமல் போயுள்ளதாக சிறிலங்கா அரச ஊடகம் தெரிவித்திருந்த நிலையிலேயே
இவ்விமானம் கந்தளாய் பகுதியில் விபத்துக்கு உள்ளாகி உள்ளதான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.