யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் டைனமட் தயாரிப்பதற்காக ரி.என்.ரி வெடிமருந்தை கிரைன்டரில அரைத்த நபர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கட்டியாக இருந்த வெடி மருந்தை தூளாக்கும் நோக்கில் கிரைன்டரில் அரைத்த போது வெடித்து சிதறியுள்ளது.
இதனால் 8 பேர் காயமடைந்த நிலையில் சிலின்டர் வெடித்து காயமடைந்ததாக தெரிவித்து வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் பொலிஸாரால் இந்த விடயம் கண்டறியப்பட்டது.