தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் – பிரான்சு!

0
994

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு பணிமனையில் பிரான்சு அரசின் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இடம்பெற்றது.


ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு. கோபி அவர்கள் ஏற்றிவைத்தார்.


ஈகைச் சுடரினை மேஜர் ஈழவீரனின் சகோதரர் ஏற்றி வைத்தார்.


மலர் வணக்கத்தினை கப்டன் சூரியத் தேவனின் சகோதரர் செலுத்தினார்.


அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் சுடர் வணக்கமும், மலர்வணக்கமும் செலுத்தினர்.


தொடர்ந்து கருத்துரைவழங்கிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் சர்வதேசத்தில் அரசியல் போராட்டம் நடத்தியவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் என்றும், சமாதான காலத்தில் ஏற்பட்ட இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பேரிழப்பு என்றும்,


சர்வதேசத்தில் ஏற்படும் அரசியல் மாற்றத்திற்கேற்ப எமது உரிமைகள் கிடைக்கும் வரை நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இறுதியாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் முழக்கத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here