உடுவில் முற்றாக முடக்கம்:எல்லைப் பகுதிகளில் கடும் பாதுகாப்பு!

0
354

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முடக்கப்பட்டதை அடுத்து, எல்லைக் கிராமங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் 7 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பிரதேச செயலாளர் பிரிவு முழுவதும் நேற்று இரவு முதல், மறு அறிவித்தல்வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவ நிலையங்கள் தவிர்ந்த ஏனையவை அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here