மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் திருகோணமலை அன்புவழிபுரம் ஞான வைரவர் ஆலயத்தின் முன்றலில் எதிர்ப்பு போராட்ட நடவடிக்கை ஒன்றினை நேற்று (10)வியாழக்கிழமை மேற்கொண்டனர்.
ஆலயத்தில் பூசை ஒன்று ஒப்பு கொடுக்கப்பட்டு இந்த எதிர்ப்பு போராட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
திருகோணமலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் தலைவி செபஸ்டியன் தேவி தலைமையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
13 வருட காலமாக தொடர்ந்தும் போராடி இதுவரைக்கும் எந்த ஒரு முடிவும் கிடைக்காதபட்சத்தில் தற்போது சர்வதேச சமூகத்திடம் நாம் நீதியினை கோரி நிற்கின்றோம்.
எங்கள் பிள்ளைகளை கடத்திச் சென்று எம்மிடம் கப்பம் கேட்டார்கள் நாம் ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தையும் கொடுத்தோம்.
ஆனால் இது வரைக்கும் எங்களுடைய பிள்ளைகளை கையளிக்கவில்லை என காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இப்போராட்ட நடவடிக்கை கொரோனா சூழ்நிலையின் காரணமாக சமூக இடை வெளிகளைப் பேணி முக கவசம் அணிந்து நடத்தப்பட்டது.