பிரான்சில் கொரோனா மூன்றாவது அலை உருவாகுமென மருத்துவர்கள் எச்சரிக்கை!

0
318

பிரான்சில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, மூன்றாவது கொரோனா அலை உருவாகலாம் என மூத்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

அரசு செய்தித் தொடர்பாளரான Gabriel Attal கூறும்போது, கொரோனா வைரஸ் அடங்க மறுக்கிறது, மூன்றாவது கொரோனா அலை உருவாகுவதற்கான அபாயம் உள்ளது, ஏற்கனவே அது அமெரிக்காவிலும் சில ஆசிய நாடுகளிலும் கூட நிகழ்ந்துள்ளது என்றார்.

அதேபோல் பிரான்ஸ் மருத்துவமனைகள் குழுமமும், கடும் நடவடிக்கை தேவை என்றும், விதிகளை சீக்கிரமாக நெகிழ்த்துவது மூன்றாவது அலை உருவாகுவதற்கான கடும் அபாயத்திற்கு வழிவகை செய்யும் என்றும் எச்சரித்துள்ளது.

பேராசியர் Eric Caumes என்பவர் கூறும்போது, விழாக்காலத்தில் நாம் கவனமாக இல்லாவிட்டால், மீண்டும் கொரோனா பரவலாம், அதனால் மூன்றாவது அலை உருவாகலாம் என்று கூறியுள்ளார்.

அதேபோல், பேராசிரியர் Renald Piarroux என்பவர் செய்தித்தாள் ஒன்றிற்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், அடுத்த ஆண்டில் கொரோனா மூன்றாவது அலை உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here