பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலைப் பகுதியில் நேற்று (09) மாலை முதல் காணாமல் போயிருந்த நபர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜே/417 கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபிள்ளை சிவகுமார் (வயது-34) என்பவர் நேற்று மாலை வெளியில் சென்றிருந்த நிலையில் வீடு திரும்பவில்லை என்று தெரியவந்தது.
இந்நிலையில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் வீட்டுக்கு அண்மையில் துன்னாலை வடக்கு மெதடிஸ்த தமிழ்க்கலவன் பாடசாலைக்குக்கு பின் பகுதியில் உள்ள ஒழுங்கையில் அவருடைய சடலம் காணப்பட்டுள்ளது.