காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் – ஐ.நா அலுவலகம் முன்பு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (10) வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை தமிழர் தாயகத்தின் முல்லைத்தீவு, வவுனியா போன்ற பகுதிகளிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.