யாழ்.தென்மராட்சி நுணாவில் A9 வீதியில் மகிழுந்து ஒன்றின் ரயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஆறு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு,மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கியப் பயணித்த மகிழுந்து ஒன்றின் ரயர் வெடித்து, திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவநேரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட ஐவர் குறித்த மகிழுந்தில் பயணித்துள்ளனர்.
அவர்களில் யாழ்ப்பாணம் நாவாந்துறையை சேர்ந்த திருமதி ஆன் டேரோளினி (வயது30) அவரது சகோதரியின் மகன் யோகதாஸ் மகிழன் (வயது6) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாக மேலதிக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன் மக்கிலியோட் (வயது – 6) என்ற
சிறுவன் தலையில் படுகாயமடைந்த
நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்
சிகிச்சை பெறுகின்றார்.
லேபோனியா என்ற பெண்ணும்
கரோலின் (வயது-35) என்ற பெண்ணும்
படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்
சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்”
என்று யாழ். போதனா வைத்தியசாலை
பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி
காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.