உடலில் ஒவ்வாமைப் பாதிப்பு உள்ளோர் தடுப்பூசியை தவிர்க்குமாறு ஆலோசனை!

0
122

உடலில் நீண்ட காலம் ஒவ்வாமை(allergic) அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் ‘பைசர்-பயோஎன்ரெக்’ தடுப்பூசியைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

புழக்கத்துக்கு வந்துள்ள புதிய கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகள் தொடர்பாக வெளிவருகின்ற முதலாவது தகவல் இதுவாகும்.

நேற்றைய தினம் தடுப்பூசி ஏற்றப்பட்ட இங்கிலாந்தின் தேசிய மருத்துவமனை சேவையாளர்கள்(NHS) இருவருக்கு உடலில் ஒவ்வாமை அறிகுறிகள் வெளிப்பட்டிருப்பதை அடுத்தே இந்த அவசர ஆலோசனை வழங்கப்பட்டி ருக்கிறது.

மருத்துவப் பணியாளர்கள் இருவரும் ஏற்கனவே நீண்டகாலம் ஒவ்வாமையால் அவதிப்பட்டுவந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இருவருக்கும் வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் தோல் தடித்தல், மூச்சு விடுவதில் சிரமங்கள், இரத்த அழுத்தம் குறைதல் போன்ற ஒவ்வாமையின் சிறு அறிகுறிகளை (allergic reactions) வெளிப்படுத்தியுள்ளனர். எனினும் அவர்கள் இருவரும் குணமடைந்து ள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இருவரது பரிசோதனை முடிவுகளை அடுத்தே இங்கிலாந்தின் மருந்து மற்றும் சுகாதாரப்பொருள்கள் கட்டுப்பாட்டுச் சபை(Medicines and Healthcare products Regulatory Agency) ஒவ்வாமை நோயாளர்கள் ‘பைசர்-பயோஎன்ரெக்’ தடுப்பூசியைத் தவிர்ப்பது நல்லது என்று ஆலோசனை வெளியிட்டுள்ளது.

உணவு, மருந்து, தடுப்பூசி என்பவற்றால் ஒவ்வாமை ஏற்படக் கூடியவர்கள் புதிய வைரஸ் தடுப்பூசியைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தடுப்பூசியை பாவனைக்கு விடுவதற்கு முன்னராக ஏற்கனவே பல்லாயிரக்கணக்கானவர்களில் நடத்தப்பட்ட பரீட்சார்த்த சோதனைகளின்போது வெளிப்பட்டிராத இத்தகைய சிறிய பக்கவிளைவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவை பற்றி உடனுக்குடன் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று பொறுப்பு வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பிரிட்டனில் புதிய ‘பைசர் – பயோஎன்ரெக்’ தடுப்பூசி மருந்து நேற்று செவ்வாய்க்கிழமை முதல் ஆயிரக்கணக்கானோருக்கு செலுத்தப்பட்டுவருகிறது.


குமாரதாஸன். பாரிஸ்.
09-12-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here